நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: எட்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன

ஜொகூர் பாரு-

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி போலீஸ் எட்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளதாக ஜொகூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஷாத் கூறினார். 

மொத்தமுள்ள எட்டு விசாரணை அறிக்கைகளில் ஐந்து விசாரணை அறிக்கைகளானது  தீ அல்லது வெடிபொருட்களைக் கொண்டு சேதம் விளைவித்தல் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும். 

இந்த குற்றங்கள் யாவும் செக்‌ஷன் 435,426 மற்றும் 427 ஆகிய குற்றவியல் செக்‌ஷன்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

சட்ட மீறல்கள் ஒவ்வொன்றும் எந்தவித சமரசமுமின்றி, உறுதியாகவும், நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இந்தத் தேர்தல் காலம் முழுவதும் காவல்துறை தனது கண்காணிப்பு, அமலாக்கம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று அவர் உறுதிப்பட கூறினார். 

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை 11ஆ ம் தேதி நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset