நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ஒங் கியான் மிங் கருத்து 

பெட்டாலிங் ஜெயா-

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி மகத்தான வெற்றி  வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் கூறினார். 

கடந்த முறை தேர்தலில் 40 இடங்களை வென்ற தேசிய முன்னணி, இந்த முறை கூடுதலாக 13 இடங்களுடன் 53 இடங்களை வெல்லும் என்று அவர் தனது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில்,  நம்பிக்கை கூட்டணி எஞ்சிய மூன்று இடங்களையும் தேசிய கூட்டணி எந்தவொரு இடங்களிலும் வெற்றிப் பெறாது என்று அவர் தெரிவித்தார். 

கடந்த 15ஆவது பொதுத்தேர்தலை  வைத்தே அவர் இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார். 

மேலும், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் நம்பிக்கை கூட்டணி ஆதரவு அலை இந்த முறை மாநில தேர்தலில் குறைவாக எதிரொலிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி கட்சிகள் நேரடியாக களம் காண்கின்றனர். 

கடந்த 2022ஆம் ஆண்டு ஜொகூர் மாநில தேர்தலில் தேசிய முன்னணி 40 இடங்களை வென்று மாநில அரசாங்கத்தை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset