நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓன் ஹபிஸ், மஸ்லி மாலிக்கின் நேரடி விவாதத்தை ஒளிபரப்ப ஆர்டிஎம் தயார்: ஃபஹ்மி

மூவார்:

ஜொகூர் மந்திரி பெசார் ஓன் ஹபிஸ் காஸி, முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் ஆகியோருக்கு இடையேயான விவாதத்திற்கு தளமாக இருக்க ஆர்டிஎம் தயாராக உள்ளது.

அனைத்துத் தரப்பினரும் ஒப்புக்கொண்ட தேதி மற்றும் நேரத்தில், ஜொகூர்பாருவில் நடத்துவது உட்பட இந்த உரையாடல் நடத்தப்படலாம்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் புத்ரி வங்சா மாநிலத் தொகுதிக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளராகவும் இருக்கும் மஸ்லியின் சவாலை ஓன் ஹபிஸ் துணிந்து ஏற்பார்.

ஓன் ஹபிஸ் விவாதத்திற்காக அல்ல, மாறாக ஜொகூர் மாநிலத்தின் எதிர்காலப் போக்கைத் தொடும் ஒரு நாகரிகமான உரையாடலுக்கு அழைக்கப்படத் தயாராக இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.

ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு நடைபெற்ற நம்பிக்கை கூட்டணி பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஃபஹ்மி செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset