செய்திகள் மலேசியா
கூலாயின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும்: ஓன் ஹபிஸ்
கூலாய்:
ஜொகூர் மாநில 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் கூலாய் மாவட்டத்தின் புக்கிட் பத்து, புக்கிட் பெர்மாய், செனாய் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும்.
ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை வலியுறுத்தினார்.
புக்கிட் பத்து தொகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தேர்தல் என்பது வெறும் அரசியல் போட்டி மட்டுமல்ல, மக்களுக்கான சேவையை தொடர்வதற்கான பொறுப்பு என்றும் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் ஜோகூர் மாநில அரசு அறிவித்ததை செயல்படுத்தி, மக்கள் நேரடியாக பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவது எங்களின் அரசியல் கலாச்சாரம் அல்ல. மக்களுக்கு தேவையானதை அறிந்து, அதை செயல்படுத்தும் அரசாகவே பாரிசான் நேஷனல் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சொல்வதை செய்வோம்; செய்வதை மட்டுமே சொல்வோம்," என்று அவர் கூறினார்.
மாநிலத்தில் மக்கள் வீட்டு வசதி திட்டங்களுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், கடந்த சில ஆண்டுகளில் மில்லியன் கணக்கான ரிங்கிட் ஒதுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பிபிஆர் வீட்டு அலகுகள் கட்டப்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சி என்பது நகரங்களை மட்டுமல்ல, சாதாரண மக்களின் வாழ்க்கையையும் உயர்த்த வேண்டிய ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாலைகள் சேதமடைதல், அடிப்படை வசதிகள், உள்ளூர் உட்கட்டமைப்பு உள்ளிட்ட மக்கள் முன்வைக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மாநில அரசு தொடர்ந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டங்களுக்காகவும் இடையறாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
இதனிடையே, 20 ஆண்டுகளாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் தனக்கு மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து செயல்பட உதவியுள்ளதாக புக்கிட் பத்து தேசிய முன்னணி வேட்பாளர் ஆர். குமரன் கூறினார்.
தேர்தலில் வெற்றி பெற்றால், ஒவ்வொரு குடியிருப்பாளரின் குரலையும் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்வேன் என்றும், எந்த நேரத்திலும் மக்களை அணுகக்கூடிய பிரதிநிதியாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 11:00 pm
ஓன் ஹபிஸ், மஸ்லி மாலிக்கின் நேரடி விவாதத்தை ஒளிபரப்ப ஆர்டிஎம் தயார்: ஃபஹ்மி
July 2, 2026, 5:36 pm
சிறை கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை வார்டன்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
July 2, 2026, 4:55 pm
எட்டு வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த ஆடவருக்குப் பத்தாண்டுகள் சிறை
July 2, 2026, 4:53 pm
