செய்திகள் மலேசியா
இளைஞர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும்; ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்: ஃபஹ்மி
மூவார்:
இளைஞர்கள் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
வாக்காளர்கள், குறிப்பாக சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் உள்ள இளைஞர்கள், ஜூலை 11 அன்று நடைபெறும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் தங்கள் வாக்களிக்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்காகத் திரும்பி வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜொகூரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வாய்ப்பைக் குடும்ப உறுப்பினர்கள் தவறவிடாமல் இருப்பதற்காக, ஜொகூரில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் ஒரு பங்கை ஆற்ற வேண்டும்.
வெளியே இருக்கும் நமது பிள்ளைகளைத் திரும்பி வந்து வாக்களிக்க அழைக்க வேண்டும்.
சிங்கப்பூர், கோலாலம்பூர் அல்லது பினாங்கில் பணிபுரியும் நமது பிள்ளைகள், ஒன்றுவிட்ட சகோதரர்கள், உறவினர்களையும் அழையுங்கள்.
பிரதமருடன் இணைந்து பணியாற்றக்கூடிய ஒரு நல்ல மாநில அரசாங்கத்தை நாங்கள் விரும்புவதால், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. என்று நம்பிக்கை கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 11:00 pm
ஓன் ஹபிஸ், மஸ்லி மாலிக்கின் நேரடி விவாதத்தை ஒளிபரப்ப ஆர்டிஎம் தயார்: ஃபஹ்மி
July 2, 2026, 10:58 pm
கூலாயின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி பெற வேண்டும்: ஓன் ஹபிஸ்
July 2, 2026, 5:36 pm
சிறை கைதிகளை தாக்கிய சம்பவம்: தைப்பிங் சிறை வார்டன்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
July 2, 2026, 4:55 pm
எட்டு வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த ஆடவருக்குப் பத்தாண்டுகள் சிறை
July 2, 2026, 4:53 pm
