நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒன்றாம் ஆண்டு மாணவியை தாக்கிய விவகாரம்: குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார் ஆசிரியர் 

பெட்டாலிங் ஜெயா- 

கடந்த ஏப்ரல் மாதம் வெண்பலகை அழிப்பானைக் கொண்டு ஒன்றாம் ஆண்டு மாணவி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தனக்கு எதிரான குற்றங்களை மறுத்து விசாரணை கோரினார். 

மாஜிஸ்டிரெட் முஸ்தாகிம் சுகார்னோ முன்னிலையில் 47 வயதான குற்றஞ்சாட்டப்பட்ட ஃபகிரா புஸ்தானி குற்றங்களை மறுத்தார். அவர் மீது குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 323யின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சட்டபட்டிருந்தது. 

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, காலை 9 மணியளவில் தொங்காங் பெச்சாவில் அமைந்துள்ள தேசிய பள்ளியொன்றில் வேண்டுமென்றே காயத்தை விளைவித்ததாக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை, அல்லது ஈராயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். 

கற்றல் நடவடிக்கையின் போது வகுப்பில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. 

தரவுகள் சமர்ப்பிப்பு நடவடிக்கைக்காக இந்த வழக்கு அடுத்த மாதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset