நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய நிதிக்குற்ற தடுப்பு மையத்தின் ஆலோசகராக டான்ஶ்ரீ அஸாம் பாக்கி நியமனம்: அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் 

பெட்டாலிங் ஜெயா- 

தேசிய நிதிக்குற்ற தடுப்பு மையத்தின் ஆலோசகராக டான்ஶ்ரீ அஸாம் பாக்கி நியமனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அரசாங்கம் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஹம்சா சைனுடின் கேட்டுக்கொண்டார் 

டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் நியமனம் என்பது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனதால் இந்த நியமனம் குறித்து வெளிப்படையான விளக்கம் வேண்டும் என்று அவர் கூறினார். 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை பொறுப்பில் இருந்த டான்ஶ்ரீ அஸாம் பாக்கி ஆறு ஆண்டுகள் கழித்து அப்பதவியிலிருந்து விலகினார். 

தற்போது மலேசிய ஊழல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக அப்துல் ஹலிம் அமான் நியமிக்கப்பட்டுள்ளார். 

பங்குகள் வாங்கிய விவகாரத்தில் டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் பெயர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரின் புதிய நியமனம் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக எதிர்கட்சி தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset