நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1எம்டிபி ஊழல் விவகாரம்: ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சிங்கப்பூர்:

1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கடந்த 2009, 2013 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திருடப்பட்ட நிதியின் பரிவர்த்தனைகளை மறைக்க உதவிய நூற்றுக்கும் மேற்பட்ட பணப் பரிமாற்றங்களை ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி அனுமதித்ததாக வழக்கில் கூறப்பட்டிருந்தது.

அத்தகைய பரிவர்த்தனைகளை அனுமதித்ததன் மூலம் சிங்கப்பூரின் பணமோசடி தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வங்கி தவறிவிட்டதாக நிறுவனக் கலைப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

மேலும், வங்கியின் அத்தகைய செயலால் US$2.7 பில்லியன் தொகையையும் $20 மில்லியன் பொது நிதியையும் தாங்கள் இழந்துவிட்டதாக வாதித் தரப்பினர் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset