நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் வருமான அந்தஸ்தை அடைய மலேசியா பெண்களின் பணியிடப் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்: லியூ

கோலாலம்பூர்:

வருமான வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, உயர் வருமான நாடு என்ற அந்தஸ்தை அடைய மலேசியா விரும்பினால், பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ லியூ சின் டோங் இதனை கூறினார்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி,
மலேசியாவின் அரசுப் பணியில் தற்போது கிட்டத்தட்ட 60 சதவீதம் பெண்கள் உள்ளனர்.

அவர்களில் சுமார் 43 சதவீதம் பேர் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர்.

இது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டிற்கு உலக அளவில் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாகும்.

இருப்பினும், பரந்த பொருளாதாரத்தில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

இது மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்படுத்தப்படாத மிகப்பெரிய வாய்ப்புகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நாட்டிற்கு, இவை மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

ஆனால், பெண்களின் தொழிலாளர் பங்களிப்புடன், குறிப்பாக நமது வட்டாரத்தில் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​நாம் கவனிக்க வேண்டிய ஒரு கணிசமான இடைவெளி இன்னும் உள்ளது.

முறைசார்ந்த வேலைவாய்ப்பில் நுழைவதற்கும் அதில் நீடிப்பதற்கும் ஊக்குவிக்கும் பணியிடங்களை உருவாக்குவதில், தனியார் துறை, குறிப்பாக வர்த்தக சபைகள், முன்னிலை வகிக்க வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளில் ஜப்பானில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு அதிகரித்திருப்பது, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என்று கூறிய அவர் ஜப்பானை ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் மலேசியாவின் தேசிய வர்த்தக, தொழிலியல் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆறாவது தேசியப் பொருளாதார மன்றத்தில் லியூ தொடக்கவுரை ஆற்றிய போது இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்










தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset