நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளைஞர்களின் திறமைக்கு வித்திடும் டாக்டர் பன்பரசி, கனிமொழி சகோதரிகள்: டத்தோ சிவக்குமார் பாராட்டு

ஈப்போ:

இசைக் கல்வியுடன் சமூகச் சேவையும் இணைத்து இளைஞர்களின் திறமைகளை வளர்து வரும் டாக்டர் பன்பரசி, கனிமொழி சகோதரிகளுக்கு மஹிமா இயக்க தலைவர் டத்தோ என். சிவக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

பேரா மாநிலத்தில் இசை, பரதநாட்டியம் கற்பித்து, ஏராளமான மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து வரும் இருவரின் அர்பணிப்பு பாராட்டுக்குரியது.

அவர்களின் இசை உலக அளவு நிலையில் பரவியுள்ளது. அதன் தொடர்சியாக இவ்வாண்டும் இந்த சிறப்பு நிகழ்வு நடக்க குறியது.

இசையுடன் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை வளர்பது இவர்களின் சேவையின் தனிச்சிறப்பு என்றும், எதிர்காலத்தில் இசை மற்றும் சமூக பணிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் டத்தோ சிவக்குமார் உறுதியளித்தார்.


இச்சகோதரிகளின் முயற்சியில்  இசை ராகங்களால் வரையப்பட்ட மாலைப்பொழுது  எனும் விழா ஈப்போ புந்தோங், அருளொளி மன்றம், சித்திரமுத்து அடிகளார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் டத்தோ சிவக்குமார், சிங்கப்பூரை சேர்ந்த திருநாவுக்கரசு ஜோதிநாதன், ஆசிரியர் மணி மாணிக்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பெரும் திரளான இசை ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset