செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: மொராக்கோ முன்னேற்றம், நெதர்லாந்து ஏமாற்றம்
மெக்சிகோ:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மொராக்கோ அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வேளையில் நெதர்லாந்து அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 32 சுற்றில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து , மொராக்கோ அணிகள் மோதின.
மெக்சிகோவில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
இதனால், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற நிலையில் இருந்தன.
பிற்பாதியில் ஆட்டம் சூடுபிடித்தது. ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து கோல் அடித்தது. இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிந்த நிலையில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து முன்னிலையில் இருந்து. இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது, ஆட்டத்தின் 91ஆவது நிமிடத்தில் மொராக்கோ கோல் அடித்தது.
இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. தொடர்ந்து போராடிய இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காதால் ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பரபரப்பாக நடந்த பெனால்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சுற்று 16க்குள் மொராக்கோ நுழைந்தது. அதேவேளை, வலுவான நெதர்லாந்து அணி நடப்பு உலகக் கிண்ண போட்டியில் இருந்து வெளியேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 3:45 pm
5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான FIFA உலகக் கோப்பையின் தற்போதைய மதிப்பு தெரியுமா?
June 30, 2026, 3:01 pm
தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்
June 30, 2026, 9:19 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேசில் திரில் வெற்றி
June 30, 2026, 9:18 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியிலுருந்து ஜெர்மனியை வெளியேற்றியது பராகுவே
June 29, 2026, 9:59 am
200 கோல்கள்: உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் புதிய சாதனை
June 29, 2026, 9:58 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கனடா அணி சுற்று 16க்கு முன்னேற்றம்
June 28, 2026, 4:12 pm
உலகக் கிண்ண போட்டி: ஆஸ்திரியா, அல்ஜீரியா மோதிய விறுவிறுப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 28, 2026, 3:47 pm
ஆஸ்திரேலியாவில் ஒரு கடற்கரைக்குக் கோல்காவலர் பெட்ரிக் பெயர் சூட்டப்பட்டது
June 28, 2026, 12:42 pm
