நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேசில் திரில் வெற்றி

ஹூஸ்டன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டி பிரேசில் அணியினர் திரில் வெற்றி பதிவு செய்தனர்.

உலகக் கிண்ண போட்டியில் சுற்று 32/ஆட்டம் ஒன்றில் பிரேசில், ஜப்பான் அணிகள் விளையாடின.

அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 29ஆவது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைஷு சனோ அதிரடியாக, அணிக்கான முதல் கோலை அடித்தார்.

அதன்பின்னர், கோல் எதுவும் விழவில்லை. முதல் பாதி முடிவில் 1-0 புள்ளி கணக்கில் ஜப்பான் அணி முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் கோல்கள் விழும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஆட்டம்  பிற்பாதியில் விறுவிறுப்பு காணப்பட்டது.

பிரேசிலின் காஸ்மிரோ 56ஆவது நிமிடத்தில் அணிக்கான முதல் கோலை போட்டார். இதனால், போட்டி 1-1 என சமன் அடைந்தது.

தொடர்ந்து, கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் (96-வது நிமிடம்) கேப்ரியேல் மார்டினெல்லி மற்றொரு கோலை போட்டார்.

இதனால், பிரேசில் அணி 2-1 புள்ளி கணக்கில் முன்னிலைக்கு வந்தது.

இதன்பின்பு ஆட்டத்தின் இறுதி வரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஜப்பானை 1-2 புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset