நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூடி டீசல் திட்டத்திற்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் தகுதி பெற்றுள்ளனர்: அமிர் ஹம்சா

புத்ராஜெயா:

பூடி டீசல் திட்டத்திற்கு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிநபர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் இதனை கூறினார்.

ஆரம்பக்கட்ட அணுகல் காலத்தில் 80,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டதால், பூடி டீசல் திட்டம் தொடர்ந்து நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

டீசல் மானியங்களை இலக்கு வைத்துச் செயல்படுத்துவதற்கு கிடைத்த நல்ல வரவேற்பையே இது பிரதிபலிக்கிறது.

இன்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்ட பூடி டீசல் கண்காணிப்பு நடவடிக்கையானது.

முழு அமலாக்கத்தின் முதல் நாளிலேயே இத்திட்டத்தின் செயலாக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டம் ஜூன் 27 முதல் முன்கூட்டிய அணுகலைத் தொடங்கியுள்ளது.
மேலும் இதுவரை எந்தவொரு பெரிய பிரச்சனைகளும் இன்றி இதன் செயலாக்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தீபகற்பத்தைப் பொறுத்தவரை, நாங்கள் ஜூன் 27 முதல் முன்கூட்டிய அணுகலைத் தொடங்கியுள்ளோம், அது சீராகச் செயல்பட்டு வருகிறது.

முன்கூட்டிய அணுகல் காலத்தில் 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் பூடி டீசலைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset