நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேர்தல் பிரச்சாரத்தின்போது புதிய திட்டங்கள், கொள்கைகள் குறித்த அறிவிப்புக்கு அனுமதி இல்லை: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்: 

தேர்தல் பிரச்சாரத்தின்போதும் புதிய திட்டங்கள் அல்லது கொள்கைகள் குறித்த எந்த அறிவிப்பும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டம், சட்டம் 5 செக்ஷன் 24B-இன் கீழுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப இவ்விவகாரம் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

''ஆகவே, இது புதிய திட்டங்களுக்குப் பயன்படுத்தினால், ஒரு பிரச்சனை எழுப்பப்படுகிறது. ஏனெனில், இந்தத் திட்டம் தொடரப்படுகிறது. விதிமுறைகளின்படி, தற்போதுள்ள திட்டங்களைத் தொடர்வது உண்மையில் அனுமதிக்கப்படுகிறது. 

தேர்தல் பிரச்சாரத்தின்போது நகரம், மாநில அரசாங்கம் அல்லது மத்திய அரசாங்க அளவில் புதிய திட்டங்களை அறிவிக்க இந்தக் கேந்திரங்களைப் பயன்படுத்த முடியாது'', என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset