நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோர்ட்டுமலை விநாயகப் பெருமானுக்கு பாலாலய வைபவம்; ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர்:

கோர்ட்டுமலை ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு பாலாலய வைபவம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா இதனை கூறினார்.


நாட்டில்  பிரசித்தி பெற்ற கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயில் கும்பாபிசேகப் பெருவிழா வெகு விரைவில் நடைபெறவிருக்கிறது.


அதற்கான திருப்பணி வேலைகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.


குறிப்பாக இவ்வாலயம் முழுமையாக கருங்கல்லில் கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிக்கு பின் இவ்வாலயம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும்.


இந்நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோர்ட்டுமலை கணேசர் ஆலயத்தில் இருக்கின்ற விநாயகப் பெருமான் பாலாலய வைபவம் எதிர்வரும் ஜூலை 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த ஆன்மீக நிகழ்ச்சிகள் பக்தர்கள் திரளாக கலந்து ஆதரவளிக்க வேண்டும்.

மேலும் இவ்விழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருள் பெற்று வளமாக வாழப் பிரார்த்திக்கிறேன் என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset