செய்திகள் மலேசியா
ஹங் துவா எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
கோலாலம்பூர்:
ஹங் துவா எல்ஆர்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அப் பயணி மயங்கி விழுந்திருக்கலாம் என ரேப்பிட் கேஎல் தெரிவித்துள்ளது.
அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் மாலை சுமார் 6.35 மணியளவில், பயணி நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்ததாக அந்த நிறுவனம் கூறியது.
பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், தண்டவாளங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் ரேபிட் கேஎல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மீட்புக் குழுவினரால் பயணிக்கு உதவி செய்யப்பட்டு, நிலையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 10:31 pm
எச்ஆர்டி கோர்ப்பின் 6 உயர் அதிகாரிகள் மீதான விசாரணை தொடர்கிறது: டத்தோஸ்ரீ ரமணன்
July 1, 2026, 2:55 pm
