நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீன தொடக்கப்பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மலாய் மாணவ மாணவிகள்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் உள்ள சீன தாய்மொழி தொடக்கப் பள்ளிகளில் (SJKC) சுமார் 41,133 மலாய் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார். இது, நாடு முழுவதும் உள்ள SJKC-களில் சேர்ந்துள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 9.01% ஆகும் என்றும், இது மலாய் மாணவர் சேர்க்கையில் தொடர்ச்சியான உயர்வுப் போக்கைப் பிரதிபலிக்கிறது என்றும் ஃபத்லினா கூறினார்.

2023-ஆம் ஆண்டில் 35,129 மலாய் மாணவர்கள் (6.99%) சேர்ந்திருந்தனர், அதைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டில் 39,373 பேரும் 2025-ஆம் ஆண்டில் 40,035  மாணவர்களும்  சேர்ந்துள்ளனர்  என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

More Malay parents choose Chinese schools as Mandarin gains appeal |  Buletin Mutiara

தமிழ் தாய்மொழி தொடக்கப் பள்ளிகளில் (SJKTs) மலாய் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், 2022-ல் 227 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2023-ல் 241  ஆகவும், 2024-ல் 288 ஆகவும், 2025-ல் 295  ஆகவும் உயர்ந்துள்ளதாக ஃபத்லினா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset