நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கனடா அணி சுற்று 16க்கு முன்னேற்றம்

லாஸ் ஏஞ்சலஸ்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கனடா அணியினர் சுற்று 16க்கு முன்னேற்றியுள்ள்ளர்.

உலகக் கோப்பை கால்பந்து சுற்று 32இல் கனடா அணியினர் தென் ஆப்பிரிக்கா அணியை சந்தித்து விளையாடினர். இது நாக் அவுட் சுற்று ஆகும்.

 ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். 

பரபரப்பாக நடந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் கோல் கணக்கை தொடங்க முடியவில்லை.

இதையடுத்து தொடங்கிய ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் கோல் கணக்கை தொடங்கி வெற்றி பெற இரு அணிகளும் தீவிர முயற்சியை மேற்கொண்டன. 

எனினும், ஆட்டத்தின் முதல் கோல் அடிப்பதற்கான காத்திருப்பு நீண்டது.

போட்டியின் இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தின் இரண்டாவது நிமிடத்தில் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ கோல் அடித்தார். 

இதன் மூலம் நடப்பு உலகக் கிண்ண போட்டியில் தனது முதல் நாக்-அவுட் போட்டியில் வெற்றி பெற்ற கனடா, தென் ஆப்பிரிக்காவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

போட்டியை இணைந்து நடத்தும் நாடான கனடா, இறுதி நிமிடங்களில் வலுவான தற்காப்பு ஆட்டத்தின் மூலம் தாக்குப்பிடித்தது. 

இதன் காரணமாக வரும் ஜூலை 4-ஆம் தேதி ஹூஸ்டனில் நெதர்லாந்து அல்லது மொராக்கோவை எதிர்கொள்ள உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset