செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டியிலுருந்து ஜெர்மனியை வெளியேற்றியது பராகுவே
போஸ்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியிலுருந்து ஜெர்மனியை வெளியேற்றி பராகுவே அணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நடந்த சுற்று 32 ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி, பராகுவே அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் போஸ்டன் அரங்கில் நடந்த இந்த போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பராகுவே அணி வீரர் ஜூலியோ என்சிசோ முதல் கோலை போட்டார்.
அதன்பின்னர், கோல் எதுவும் விழவில்லை. இதனால், முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் பராகுவே அணி முன்னிலையில் இருந்தது. ஜெர்மனி பின்தங்கி இருந்தது.
இதன்பின்பு பிற்பாதி ஆட்டம் தொடர்ந்தது. 54ஆஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் கை ஹாவெர்ட்ஜ் ஒரு கோலை போட்டார். இதனால் போட்டி 1-1 என சமநிலை ஆனது.
தொடந்து போராடிய இரு அணிகளும் கோல் கணக்கில் எதுவும் அடிக்காததால் ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்படது.
மொத்தம் 6 முறை கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பில், ஜெர்மனி 3 முறையும், பராகுவே 4 முறையும் கோல் அடித்தன.
இதனால், பெனால்டியில் 3-4 என்ற புள்ளி கணக்கில், பலம் வாய்ந்த ஜெர்மனியை, பராகுவே வீழ்த்தியது.
இதனை அடுத்து, 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி, பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 3:45 pm
5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான FIFA உலகக் கோப்பையின் தற்போதைய மதிப்பு தெரியுமா?
June 30, 2026, 3:01 pm
தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்
June 30, 2026, 12:44 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: மொராக்கோ முன்னேற்றம், நெதர்லாந்து ஏமாற்றம்
June 30, 2026, 9:19 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேசில் திரில் வெற்றி
June 29, 2026, 9:59 am
200 கோல்கள்: உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் புதிய சாதனை
June 29, 2026, 9:58 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கனடா அணி சுற்று 16க்கு முன்னேற்றம்
June 28, 2026, 4:12 pm
உலகக் கிண்ண போட்டி: ஆஸ்திரியா, அல்ஜீரியா மோதிய விறுவிறுப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 28, 2026, 3:47 pm
ஆஸ்திரேலியாவில் ஒரு கடற்கரைக்குக் கோல்காவலர் பெட்ரிக் பெயர் சூட்டப்பட்டது
June 28, 2026, 12:42 pm
