செய்திகள் விளையாட்டு
200 கோல்கள்: உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் புதிய சாதனை
நியூயார்க்:
மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில் நடக்கும் உலகக் கிண்ண கால்பந்து 23ச்வது சீசனில் கோல் மழை பொழிகிறது.
லீக் சுற்றின் முடிவில், 72 போட்டியில், 215 கோல் பதிவாகி உள்ளது.
இதன்மூலம் உலகக் கிண்ண கால்பந்து அரங்கில், ஒரு சீசனில் முதல் முறையாக 200 கோல் பதிவு செய்து புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், 2022ல் கட்டாரில் நடந்த 22ஆவது சீசனில் 64 போட்டியில், 172 கோல் அடிக்கப்பட்டது சாதனையாக இருந்தது.
இன்னும் 42 போட்டிகள் மீதமிருப்பதால், மொத்த கோல்களின் எண்ணிக்கை 250 தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை அதிக கோல் அடித்த அணிகளுக்கான பட்டியலில் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து அணிகள் முதலிடத்தில் உள்ளன. மூன்று அணிகளும் தலா 10 கோல் அடித்துள்ளன.
அடுத்த 5 இடங்களில் தலா 8 கோல் அடித்த செனகல், நார்வே, கனடா, அர்ஜெண்டினா, அமெரிக்கா அணிகள் உள்ளன.
அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி முதலிடத்தில் உள்ளார்.
இவர்ந்3 போட்டியில், ஒரு ஹாட்ரிக் உட்பட 6 கோல் அடித்துள்ளார்.
அடுத்த நான்கு இடங்களில் தலா 4 கோல் அடித்த பிரான்சின் எம்பாப்வே, டெம்பலே, பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர், நார்வேயின் எர்லிங் ஹாலண்ட் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 9:58 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கனடா அணி சுற்று 16க்கு முன்னேற்றம்
June 28, 2026, 4:12 pm
உலகக் கிண்ண போட்டி: ஆஸ்திரியா, அல்ஜீரியா மோதிய விறுவிறுப்பான ஆட்டம் சமநிலையில் முடிந்தது
June 28, 2026, 3:47 pm
ஆஸ்திரேலியாவில் ஒரு கடற்கரைக்குக் கோல்காவலர் பெட்ரிக் பெயர் சூட்டப்பட்டது
June 28, 2026, 12:42 pm
உலகக் கிண்ண போட்டியில் மெஸ்சி அசத்தல்: ஜோர்டானை வீழ்த்திய அர்ஜெண்டினா
June 28, 2026, 11:45 am
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: ஈராக்கை துவம்சம் செய்த செனகல் அணி
June 28, 2026, 9:54 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: போர்த்துகல் அணி ஏமாற்றம்
June 28, 2026, 9:53 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: இங்கிலாந்து, குரோஷியா முன்னேற்றம்
June 27, 2026, 12:11 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோப்வெர்டே அணி சாதனை
June 27, 2026, 12:09 pm
