செய்திகள் இந்தியா
இந்திய பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
புதுடெல்லி:
இந்தியாவில் பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களை இந்திய அரசு கணிசமாக உயர்த்தியுள்ளது. இதற்கான புதிய கட்டண விகிதங்கள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
பாஸ்போர்ட் என்பது முதன்மையாக ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது இந்தியக் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என்று இந்திய அரசு அண்மையில் தெளிவுபடுத்திய மறுநாளே இந்த விலை உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கும், அதனைப் புதுப்பிப்பதற்கும் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான 36 பக்க புதிய பாஸ்போர்ட் அல்லது புதுப்பித்தலுக்கான கட்டணம் தற்போதைய ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே பிரிவில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பக்கங்கள் கொண்ட 60 பக்க பாஸ்போர்ட்டுக்கான சாதாரண கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் கட்டணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் சாதாரண முறையில் ரூ.1,750 ஆகவும், தட்கல் முறையில் ரூ.4,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு மாற்றாகப் புதிய பாஸ்போர்ட் பெற இனி பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அதன்படி, 36 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்கு சாதாரண முறையில் ரூ.5,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேபோல், 60 பக்க மாற்று பாஸ்போர்ட்டுக்குச் சாதாரண முறையில் ரூ.6,000 மற்றும் தட்கல் முறையில் ரூ.8,500 கட்டணம் செலுத்த வேண்டும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
