செய்திகள் இந்தியா
பெங்களூருவில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் லாரியில் வீட்டுக்கு சென்ற ஐடி ஊழியர்கள்
பெங்களூரு:
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் 20 லட்சத்துக்கும் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் அலுவலகங்களுக்கு மெட்ரோ ரயில் மூலம் செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கப்பன் பூங்கா மெட்ரோ நிலையத்தில் ஊதா வழித்தடத்தில் இயங்கிய ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. கெம்பேகவுடா மெட்ரோ நிலையம் முதல் பையப்பனஹள்ளி வரையிலான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் எம்.ஜி.சாலை, இந்திரா நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
10-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களை சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மெட்ரோ சேவை முடங்கியதால் பேருந்து, ஆட்டோ, வாடகை கார் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் 5 கி.மீ. வரை நடந்து சென்றனர். பெரும்பாலானோர் அதிக கட்டணம் கொடுத்து வாடகை வாகனங்களில் சென்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 25, 2026, 12:01 pm
‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலி இந்தியாவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
