செய்திகள் இந்தியா
ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
டெஹ்ரான்:
போரில் மறைந்த ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து டெஹ்ரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த தாக்குதலின் முதல் நாளில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டத்தின்படி இறந்தவர்களின் உடலை கூடிய விரைவில் அடக்கம் செய்ய வேண்டும் என்றாலும் போர் காலங்களில் இதற்கு விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் கமேனியின் இறுதிச்சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் ஜூலை 4-ம் தேதி தொடங்க உள்ளன.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்
August 22, 2026, 6:05 pm
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு நடவடிக்கை
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 21, 2026, 10:14 am
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
