செய்திகள் இந்தியா
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், உ.பி.யில் மதுராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலிலும் காணிக்கை திருட்டு நடந்துள்ளதாக கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் நிலம் மீட்பு தொடர்பான வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான துறவி தினேஷ் பலஹாரி மகாராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வருக்கு துறவி தினேஷ் எழுதிய கடிதத்தில், ‘‘கிருஷ்ணர் கோயிலுக்கு காணிக்கையாக ரொக்கம், தங்கம், வெள்ளி ஆபரணங்களைப் பக்தர்கள் வழங்கி வருகின்றனர். அதில் முறைகேடுகள் நடக்கின்றன.
கோயில் நிர்வாகி கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தான் செயலாளர் கபில் சர்மா, ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்துள்ளார். எனவே காணிக்கை குறித்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.
மதுரா கோயிலை நிர்வகிக்கும் கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தானும், கோயில் நிதி முறைகேடு குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
இந்திய பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
June 25, 2026, 3:00 pm
பெங்களூருவில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் லாரியில் வீட்டுக்கு சென்ற ஐடி ஊழியர்கள்
June 25, 2026, 12:01 pm
‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலி இந்தியாவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
June 21, 2026, 9:23 am
