செய்திகள் இந்தியா
‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலி இந்தியாவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது
புதுடெல்லி:
இந்திய தேசிய பரிவா்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) ‘பீம்’ பணப்பரிவா்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இச்செயலியில் கடந்த ஆண்டு ஜூனில் 7.96 கோடியாக இருந்த மாதாந்திர பரிவா்த்தனைகள், கடந்த மே மாதத்தில் 24.4 கோடியாக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இச்செயலி மூலம் ரூ.26,952 கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து என்பிசிஐ-பீம் சா்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ லலிதா நடராஜ் கூறுகையில், ‘மளிகைப் பொருள்கள், உணவகங்கள் என அன்றாடச் செலவுகளுக்கான பரிவா்த்தனைகளுக்கும் மக்கள் எண்ம முறைக்கு மாறி வருவது மிகவும் ஊக்கமளிக்கிறது. வாடிக்கையாளா்களுக்கு எளிய மற்றும் தடையற்ற சேவைகளைத் தொடா்ந்து வழங்க முன்னுரிமை அளிப்போம்’ என்றாா்.
கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் டிஜிட்டல் பரிவா்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், இச்செயலி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் கிடைப்பதுடன், குறைந்த இணைய வசதி உள்ள இடங்களிலும் தடையின்றிச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
