செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோப்வெர்டே அணி சாதனை
ஹூஸ்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 32க்கு முன்னேறி கோப்வெர்டே அணியினர் சாதனை படைத்தனர்.
ஹூஸ்டனின் நடைபெற்ற ஆட்டத்தில் கோப்வெர்டே அணியினர் சவூதி அரேபியா அணியை சந்தித்து விளையாடினர்.
தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் பாணியில் விளையாடின. கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்தன.
இருப்பினும் இரு அணியின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்ததால் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவாகவில்லை.
பிற்பாதியிலும் முதல் கோலுக்காக கேப்வெர்டே, சவூதி அரேபியா அணிகள் கடுமையாக போராடின.
ஆனால், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டமும் கோல்காவலர்களின் செயல்பாடும் சிறப்பாக இருந்ததால், எந்த கோலும் பதிவாகவில்லை.
இதனால், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இந்த சமநிலையின் மூலம் கேப்வெர்டே, சவூதி அரேபியா அணிகள் தலா ஒரு புள்ளியை பெற்றன.
முதல் முறையாக உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் களமிறங்கிய கோப்வெர்டே அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுற்று 32க்கு முன்னேறி சாதித்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 12:09 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் முன்னேற்றம்
June 27, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் அசத்தல் வெற்றி
June 26, 2026, 3:57 pm
மைலோ அனைத்துலக கராத்தே போட்டியில் 1850 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்: மாஸ்டர் தியாகு
June 26, 2026, 10:01 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
June 26, 2026, 8:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி அதிர்ச்சி
June 25, 2026, 9:39 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேலில் மகத்தான வெற்றி
June 25, 2026, 9:34 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி
June 24, 2026, 12:01 pm
