செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் முன்னேற்றம்
குவாடலஜரா:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, உருகுவேவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
குவாடலஜராவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தியது.
எனினும், கிடைத்த கோல் வாய்ப்புகளை ஆரம்பத்தில் கோலாக மாற்ற முடியாமல் தடுமாறியது.
முதல் பாதி கோல் இன்றி முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதி நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலெக்ஸ் பேனா அபாரமாக கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார்.
பிற்பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
இறுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி 3 புள்ளிகளை கைப்பற்றி அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 12:11 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கோப்வெர்டே அணி சாதனை
June 27, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் அசத்தல் வெற்றி
June 26, 2026, 3:57 pm
மைலோ அனைத்துலக கராத்தே போட்டியில் 1850 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்: மாஸ்டர் தியாகு
June 26, 2026, 10:01 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
June 26, 2026, 8:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி அதிர்ச்சி
June 25, 2026, 9:39 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேலில் மகத்தான வெற்றி
June 25, 2026, 9:34 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி
June 24, 2026, 12:01 pm
