நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மைலோ அனைத்துலக கராத்தே போட்டியில் 1850 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்: மாஸ்டர் தியாகு

கோலாலம்பூர்:

மைலோ அனைத்துலக கராத்தே போட்டியில் மொத்தமாக 1,850 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மாஸ்டர் தியாகு கூறினார்.

புத்ராஜெயா கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் 25ஆவது ஆண்டாக இப் போட்டி நடைபெறுகிறது.

போட்டி ஏற்பாட்டு இயக்குநர் டத்தோ டாக்டர் பொன்னையா தலைமையில் இப் போட்டி அடுத்த 3 நாடுகளுக்கு நடைபெறுகிறது.

இதில் 17 நாடுகளில் இருந்து 1,850த்திற்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மலேசியாவில் இருந்து 92 அணிகள், இந்தியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், ஹாங்காங், ஆஸ்திரேலியா, நேப்பாளம், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

5 வயது முதல் 50 வயது வரையிலான போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தவுள்ளனர்.

ஆகவே கராத்தே ஆர்வலர்கள் இப் போட்டிக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என தியாகு கேட்டுக் கொண்டார்.

முன்னதாக இப்போட்டியை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி அதிகாரப்பூர்வமாக அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset