செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் அசத்தல் வெற்றி
போஸ்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நார்வே, பிரான்ஸ் அணிகள் மோதின.
போஸ்டன் அரங்கில் நடந்த இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் கணக்கை தொடங்க முனைப்பு காட்டினர்.
ஆட்டம் தொடங்கிய 7ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஓஸ்மனே டெம்பெலே ஒரு கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து 20ஆவது நிமிடத்தில் எம்பாப்பே அசிஸ்ட்-இல் டெம்பலே கோல் அடிக்க பிரான்ஸ் அணி 0-2 கணக்கில் முன்னிலை பெற்றது.
21ஆவது நிமிடத்தில் நார்வே வீரர் தெலோ அசர்கார்டு கோல் அடிக்க நார்வே அணி 1-2 என கணக்கை தொடங்கியது.
32ஆவது நிமிடத்தில் டெம்பலே பிரான்ஸ் அணிக்காக மற்றொரு கோல் அடிக்க அந்த அணி 1-3 கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதி வரை பிரான்ஸ் அணி 1-3 கணக்கில் முன்னிலையை தொடர்ந்தது.
தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நார்வே அணி கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலனிளிக்கவில்லை.
ஆட்டத்தின் இறுதியில் பிரான்ஸ் அணி டிசெய்ர் டௌ கோல் அடிக்க 1-4 கணக்கில் முன்னிலை பெற்று அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் செனகல் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 26, 2026, 3:57 pm
மைலோ அனைத்துலக கராத்தே போட்டியில் 1850 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்: மாஸ்டர் தியாகு
June 26, 2026, 10:01 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: துனிசியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
June 26, 2026, 8:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி அதிர்ச்சி
June 25, 2026, 9:39 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேலில் மகத்தான வெற்றி
June 25, 2026, 9:34 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி
June 24, 2026, 12:01 pm
ஈரானிய கால்பந்து அணிக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது
June 24, 2026, 11:04 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பனமாவை வீழ்த்தியது குரோஷியா
June 24, 2026, 8:00 am
