நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஜெர்மனி அதிர்ச்சி

நியூஜெர்சி:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியினர் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

மெட் லைவ் அரங்கில் நடைபெற்ற இ பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனி அணியினர் ஈக்குவடோர் அணியை சந்தித்து விளையாடினர்.

முற்பாதி ஆட்டத்தின் 2ஆவது நிமிடத்தில் ஜெர்மனி ஆட்டக்காரர் லெரோய் சனே ஒரு கோலை அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் 9ஆவது நிமிடத்தில் ஈக்குவடோர் அணியின் ஆட்டக்காரர் நில்சன் அங்கோலா ஒரு கோலை ஆட்டத்தை அடித்து ஆட்டத்தை சமபப்படுத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற பிற்பாதியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.

ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் கோன்சாலோ பிலாதா ஈக்குவடோர் அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.

தொடர்ந்து போராடிய ஜெர்மனி அணியினர் கோல் எதுவும் அடிக்காததால் 2-1 என்ற கோல் கணக்கில் ஈக்குவடோர் அணியிடம் தோல்வி கண்டனர்.

ஏற்கனவே உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும் ஜெர்மனி அணியின் இந்த தோல்வி அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

மற்றொரு ஆட்டத்தில் ஐவரிகோஸ்ட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் குராசோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset