செய்திகள் உலகம்
அடையாளம் தெரியாத பொருளால் தாக்கப்பட்ட சரக்குக் கப்பல்: ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்
மஸ்கட்:
ஒமான் கடற்கரைக்கு அருகே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் காணப்படாத மர்மப் பொருள் தாக்கியதில் அதன் கட்டுப்பாட்டு அறைப் பகுதி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சம்பவத்தில் கப்பல் பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை. மேலும், கடல் சூழலுக்கும் எந்தவித மாசுபாடோ பாதிப்போ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் (UKMTO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒமானின் தாஹித் பகுதிக்குத் தென்கிழக்கே சுமார் 7.5 கடல் மைல் தொலைவில், கப்பலின் வலதுபுறத்தில் இந்தத் தாக்குதல் பதிவாகியுள்ளது.
சம்பவத்தையடுத்து, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் என்ன? தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கையையும் உடனடியாக கடல்சார் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் UKMTO அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச கப்பல் போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ள வேளையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. முன்னதாக, சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO), ஒமான் அரசாங்கம் இணைந்து, அந்த முக்கிய கடல் வழித்தடத்தில் சிக்கித் தவித்த கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல புதிய பாதுகாப்பு வழித்தடத்தை அறிமுகப்படுத்தியிருந்தன.
உலகளாவிய எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகத்தின் முக்கிய நுழைவாயிலாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு மீதான கவலை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC), தாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள கடல் வழித்தடங்களை மட்டுமே அனைத்து கப்பல்களும் பயன்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
