நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

ஈரானில் மழை பெய்யாமல் மேகங்களை மறைத்து பஞ்சம் கொண்டு வந்த இஸ்ரேலும் அதனைத் தகர்த்த ஈரானும்

ஈரானின் வானம் கடந்த எட்டு ஆண்டுகளாக நீல நிறத்தில் வெப்பத்தால் தகித்துக் கொண்டிருந்தது. 

ஒரு காலத்தில் செழிப்பான விளைநிலங்களாக இருந்த இடங்கள் இப்போது வெடிப்பு விழுந்த பாலைவனங்களாக மாறிவிட்டன. 

ஒரு நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை (Sanctions) விதிப்பது என்பது அதன் கைகளைக்கட்டுவதற்குச் சமம். ஆனால், அந்த நாட்டின் தற்சார்பு வாழ்வாதாரமான விவசாயத்தை அழிப்பது என்பது அதன் கழுத்தை நெரிப்பதற்குச் சமம். 

ஈரானின் கழுத்தை நெரிக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் கையில் எடுத்த ஆயுதம் , 
அதுதான்: பஞ்சம்.

ஈரானுக்கு மழையைக் கொண்டு வரும் மேகங்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி, லெபனான், சிரியா மற்றும் ஈராக் வழியாகப் பயணிக்கின்றன. 

இந்த "மேகப் படுகையை" (Cloud Basin) குறிவைத்து வளைகுடா நாடுகளில் அதிநவீன THAAD Radar அமைப்புகளையும், அயனி உமிழ்ப்பான்களையும் (Ion emitters aka HAARP) அமெரிக்கா நிறுவியிருந்தது.

இந்தத் தொழில்நுட்பம் ஈரான் மீது ஒரு கண்ணுக்குத் தெரியாத குடையைப் போலச் செயல்பட்டது. 

மேகங்கள் ஈரான் எல்லைக்குள் நுழையும்போது, இந்த ரேடார்கள் மூலம் அனுப்பப்படும் மின்காந்த அலைகள் மேகங்களுக்குள் இருக்கும் நீர் மூலக்கூறுகள் ஒன்றிணைவதைத் தடுத்தன. 

அதாவது, மழையாகப் பொழிய வேண்டிய மேகங்களைச் சிதறடித்து (Dissipate), அவற்றை வெறும் நீராவியாக மாற்றிவிடும் "வானிலை போர்முறை" (Weather Warfare) இது.

2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம். 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான வறட்சியால் ஈரானின் உணவுப் பொருட்கள் விலை விண்ணைத் தொட்டது. 

மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி ஆட்சிக் கவிழ்ப்பைச் செய்ய எதிரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஈரான் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தது.

ஈரானின் ஏவுகணைகள் வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த அந்த மின்காந்த ரேடார் தளங்களை துல்லியமாகத் தாக்கி அழித்தன. சில மணிநேரங்களில் அந்த "மின்காந்தக் குடை" கிழிந்தது.

ரேடார்கள் செயலிழந்த அடுத்த 72 மணிநேரத்திற்குள் அதிசயம் நிகழ்ந்தது. எட்டு ஆண்டுகளாக ஈரானுக்குள் நுழைய விடாமல் விரட்டப்பட்ட மேகங்கள், கருமேகங்களாகத் திரண்டு வந்து பேய் மழையாகக் கொட்டின. 

கடந்த ஏழு ஆண்டுகளாக வறண்டு கிடந்த Darbandikhan அணை, 3 பில்லியன் கனமீட்டர் நீரால் நிரம்பி 100% கொள்ளளவை எட்டியது.

இந்த தொழில் நுட்பத்தில் முக்கியமானதும், ஆபத்தானதும் என கருதப்படுவது HAARP என்ற தொழில்நுட்பம். 

HAARP (High Frequency Active Auroral Research Program) மற்றும் Ionospheric Manipulation என்ற இரு தொழில் நுட்பங்கள் எப்படி மழையைத் தடுக்கின்றன என்பதை பார்க்கலாம்.

முதலாவது வகை- 

HAARP technology யின் படி Ionization உண்டாக்க வளைகுடா நாடுகளில் உள்ள தரைவழி தளங்களில் இருந்து வான்வெளிக்கு (Ionosphere) அதிகப்படியான Radiated power ஐ அனுப்புவதன் மூலம், அங்குள்ள மேகங்களின் தன்மையை மாற்ற முடியும்.

இரண்டாவது வகை-

Cloud seeding என்ற மேகங்களுக்குள் Silver Iodide என்ற இரசாயன பொருட்களைத் தூவி மழையை வரவழைப்பது. (இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தனக்குத் தேவையான மழையை மேலேயே உறிஞ்சிவிடுவதால், ஈரானுக்குச் செல்ல வேண்டிய மேகங்கள் காலியாகின்றன).

மூன்றாவது வகை- 

Cloud Dissipation என அழைக்கப்படும் உயர் அதிர்வெண் கொண்ட ரேடார் அலைகளை செலுத்துவதன் மூலம் (High-frequency waves) மேகங்கள் மழையாகக் குளிர்ந்து பொழியவிடாமல் தடுத்து, அவற்றைச் சிதறடிக்கும்.

மின்காந்தத் தடுப்பு (Electromagnetic Shielding) என்ற முறையை THAAD போன்ற அதிநவீன ரேடார் அமைப்புகள் மூலம் மேகங்களின் மின்சுமையை (Electrical charge) மாற்றி, வறட்சியை செயற்கையாக நீட்டிக்கச் செய்ய முடியும். 

இவ்வகையான தொழில் நுட்பங்களே ஈரானால் தாக்கியழிக்கப்பட்டன.

ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை, நவீன காலப் போர்கள் வெறும் எல்லைகளோடும் ஏவுகணைகளோடும் முடிந்துவிடுவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. 

ஒரு நாட்டின் இயற்கை வளத்தைத் திருடி, அதன் பொருளாதாரத்தைச் சிதைக்க அமெரிக்கா கையில் எடுத்த "வானிலை போர்முறை" (Weather Warfare), ஈரானின் துல்லியமான தாக்குதலால் தவிடுபொடியானது.

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அந்த மின்காந்தச் சுவர் (THAAD Radar Wall) தகர்க்கப்பட்ட அடுத்த சில மணிநேரங்களிலேயே வானம் ஈரான் வசமானது. 

இது வெறும் தற்செயலான மழை அல்ல; மாறாக, ஒரு நாட்டின் இறையாண்மையை இயற்கையோடு இணைத்து ஈரான் மீட்டெடுத்த வெற்றி என்றே பார்க்கவேண்டும். 

அதுமட்டுமல்ல அமெரிக்காவின் HAARP மற்றும் ரேடார் தொழில்நுட்பங்கள் உலகின் எந்தப் பகுதியையும் வறண்ட பூமியாக மாற்ற முடியும் என்ற பிம்பத்தை ஈரான் உடைத்துள்ளது.

வறட்சியின் மூலம் மக்களைப் பசிப்பிணியில் தள்ளி, உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்ட நினைத்த எதிரிகளின் சதி, அணைகள் நிரம்பியதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, ஒரு நாடு தனது இயற்கை வளத்தைப் பாதுகாக்கத் துணிந்தால், தொழில்நுட்பப் போரிலும் (Hybrid Warfare) வெல்ல முடியும் என்பதற்கு ஈரான் ஒரு உலகளாவிய உதாரணமாக மாறியுள்ளது.

இறுதியாக, வான்வெளியைக் கைப்பற்றி மழையைத் திருட நினைத்த அமெரிக்காவின் தந்திரத்தை, ஈரான் தனது ஏவுகணைகளால் முறியடித்து, மீண்டும் தன் நிலத்தில் வசந்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 

இது அமெரிக்காவிற்கு எதிரான ஈரானின் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

- முகிந்தன் இராஜசிங்கம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset