செய்திகள் மலேசியா
உயர் கல்வி மாணவி கொலைக்கு தனிப்பட்ட பிரச்சினைகளும் முக்கிய காரணமாகும்: போலிஸ்
ஷாஆலம்:
உயர் கல்வி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தனிப்பட்ட பிரச்சினைகளும் முக்கிய காரணமாகும்.
சிலாங்கூர் போலிச் தலைவர் டத்தோ ஷசாலி கஹார் இதனை தெரிவித்தார்.
நேற்று பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் சன்வேயில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், உடல் காயங்களுடன் சடலமாக தனியார் உயர்கல்வி மாணவி கண்டெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னால், உணர்வுகள், அன்றாடச் செலவுகள் தொடர்பான தனிப்பட்ட பிரச்சனைகளே ஆரம்பகட்ட நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண்ணுக்கும், பல்கலைக்கழக மாணவரான சந்தேக நபருக்கும் ஒருவரையொருவர் தெரிந்திருந்ததும், அவர்கள் உறவில் இருந்ததும் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரே இதில் சம்பந்தப்பட்ட முக்கிய சந்தேக நபர் என்றும், வேறு சந்தேக நபர்கள் யாரும் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் நாங்கள் நம்புகிறோம்.
இருப்பினும், விசாரணை முடியும் வரை நாங்கள் அதன் கதவை மூட முடியாது.
இன்று இங்குள்ள சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 4:18 pm
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
June 24, 2026, 3:31 pm
பெர்கெசோ உதவித் தொகை கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்
June 24, 2026, 3:16 pm
LRT3 ஜூன் 29 முதல் இயங்கத் தொடங்குகிறது: அந்தோனி லோக்
June 24, 2026, 3:14 pm
தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினராக தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் வீரன் மறு நியமனம்
June 24, 2026, 2:14 pm
