நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

LRT3 ஜூன் 29 முதல் இயங்கத் தொடங்குகிறது: அந்தோனி லோக் 

ஷா ஆலம்:

ஷா ஆலம், அதன் சுற்று வட்டார பகுதிகளை இணைக்கும் லைட் ரெயில் டிரான்சிட் 3 (LRT3) சேவை, அடுத்த வாரம் ஜூன் 29 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக இயக்கத்திற்கு வரவுள்ளது. இச்சேவை கிள்ளான் பள்ளத்தாக்கின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது.

இந்த LRT3 புதிய பாதையைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

37.8 கிலோமீட்டர் நீளமுடைய LRT3 பாதை, பெட்டாலிங் ஜெயாவின் பண்டார் உத்தமா நிலையத்திலிருந்து கிளாங்கின் ஜொஹான் செத்தியா வரை இணைக்கிறது. ஷா ஆலம் உள்ளிட்ட பல முக்கிய குடியிருப்பு, வணிக மையங்கள் இந்தப் பாதையின் மூலம் நேரடி இணைப்பைப் பெறுகின்றன.

நீண்டகாலமாக கிள்ளான் பள்ளத்தாக்கின் மேற்கு வட்டார மக்கள் எதிர்பார்த்திருந்த இந்தத் திட்டம், தினசரி பயணிகளை மட்டுமல்லாது, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நகர்ப்புற இணைப்புத் திறனை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், LRT3 சேவையின் அறிமுகம், தற்போதுள்ள நகர ரயில் வலையமைப்பை வலுப்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு வேகமான, வசதியான, நவீன பொதுப் போக்குவரத்து அனுபவத்தை வழங்கும் என நம்பப்படுகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கின் போக்குவரத்து எதிர்காலத்தை மாற்றியமைக்கும் புதிய அத்தியாயமாக LRT3 சேவை உருவெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset