செய்திகள் மலேசியா
ஜாலான் லஹாட் சாலை முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளது; 2.7 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: காளிமுத்து, லோரன்ஸ்
ஈப்போ:
நீண்ட காலமாக சேதமடைந்து குழிகள், மேடு பள்ளங்களுடன் காணப்பட்ட ஜாலான் லஹாட் சாலை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக மாநகர் மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஈப்போ ஊராட்சி மன்ற உறுப்பினர்களான காளிமுத்து, லோரன்ஸ் பழனிச்சாமி ஆகியோர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தனர்.
ஜாலான் லஹாட் சாலை பல ஆண்டுகளாக மோசமான நிலையில் இருந்து வந்ததுடன், அப்பகுதியில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களின் பின்னர் சாலை முறையாக சீரமைக்கப்படாததால் பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் கிடைத்தன.
இந்தப் பிரச்சினை தொடர்பாக சுமார் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ஈப்போ மாநகராட்சி, மாநில அரசு, மந்திரி புசார் அலுவலகத்துடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, சாலைப் புனரமைப்பிற்காக 2.7 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஜாலான் கிளேடாங் உத்தாரா பகுதி தொடக்கம் பாலிம் சந்திப்பு வரையிலான சுமார் நான்கு கிலோமீட்டர் தூர சாலை முழுமையாக மறுசீரமைக்கப்படும்.
திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
டெண்டர் நடைமுறைகள் ஜூலை மாத நடுப்பகுதியில் தொடங்கப்படவுள்ளதுடன், பணிகள் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்திற்குள் சாலைப் பணிகள் நிறைவடைந்து, தீபாவளிக்குள் பொதுமக்கள் புதிய சாலையை பயன்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சாலை வழியாக பள்ளிகள், தொழிற்சாலைகள், வர்த்தகப் பகுதிகளுக்கு தினசரி அதிகளவில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் சாலை விரைவாக சேதமடைந்ததாகவும், புதிய சாலை நீண்டகால பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 4:18 pm
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
June 24, 2026, 3:31 pm
பெர்கெசோ உதவித் தொகை கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்
June 24, 2026, 3:16 pm
LRT3 ஜூன் 29 முதல் இயங்கத் தொடங்குகிறது: அந்தோனி லோக்
June 24, 2026, 3:15 pm
உயர் கல்வி மாணவி கொலைக்கு தனிப்பட்ட பிரச்சினைகளும் முக்கிய காரணமாகும்: போலிஸ்
June 24, 2026, 3:14 pm
தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினராக தைப்பிங் தொகுதி மஇகா தலைவர் வீரன் மறு நியமனம்
June 24, 2026, 2:14 pm
