செய்திகள் மலேசியா
14 சிறந்த மாணவர்களுக்கு BYDPA உயரிய உதவித்தொகை வழங்கப்பட்டது
கோலாலம்பூர்:
நாட்டின் மிக உயரிய, மதிப்புமிக்க கல்வி உதவித்தொகைகளில் ஒன்றான 'Yang di-Pertuan Agong' உதவித்தொகை (BYDPA) 2026, கல்வி, ஆராய்ச்சித் துறைகளில் சிறந்து விளங்கிய 14 திறமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற சிறப்புமிக்க விருது வழங்கும் விழாவில், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேரில் கலந்து கொண்டு உதவித்தொகைகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த ஆண்டுக்கான பெறுநர்களில், ஏழு முனைவர் பட்ட (PhD) மாணவர்களும், ஏழு முதுநிலை ஆராய்ச்சி (Master by Research) மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் நான்கு பேர் உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரவுள்ள நிலையில், மேலும் 10 பேர் உள்ளூர் ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களில் தங்களது கல்விப் பயணத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட BYDPA, பொதுச் சேவைத் துறை (JPA) வழங்கும் மிகவும் கௌரவமான கல்வி உதவித்தொகையாகும். கல்விச் சாதனைகளில் மட்டுமன்றி, இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகள், சமூகப் பங்களிப்பு, படைப்பாற்றல், புதுமைத் திறன்களிலும் சிறந்து விளங்கும் மலேசியர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் அறிமுகமானதிலிருந்து இதுவரை 239 பேர் பயனடைந்துள்ளனர். அதில் 124 முனைவர் பட்ட மாணவர்களும், 115 முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களும் அடங்குகின்றனர்.
உலகத் தரம் வாய்ந்த மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில் கல்வி, ஆராய்ச்சி துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த உதவித்தொகை மீண்டும் வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தவுள்ள அறிவுச் செல்வங்களுக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம், மலேசியாவின் கல்வி மேம்பாட்டுப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 4:18 pm
கட்டுமானச் செலவு உயர்வையும் மீறி NPE 2 திட்டம் பாதிக்கப்படாது: IJM நம்பிக்கை
June 24, 2026, 3:31 pm
பெர்கெசோ உதவித் தொகை கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று நாட்களில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்
June 24, 2026, 3:16 pm
LRT3 ஜூன் 29 முதல் இயங்கத் தொடங்குகிறது: அந்தோனி லோக்
June 24, 2026, 3:15 pm
உயர் கல்வி மாணவி கொலைக்கு தனிப்பட்ட பிரச்சினைகளும் முக்கிய காரணமாகும்: போலிஸ்
June 24, 2026, 3:14 pm
