செய்திகள் விளையாட்டு
‘underdog’ இல்லை, அசைக்க முடியாத போராளிகள்: துருக்கியை வீழ்த்தி பராகுவே
சாண்டா கிளாரா:
உலகக் கிண்ண அரங்கில் துருக்கியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பராகுவே, தங்களை இனி ‘underdog’ அணியாகக் கருத முடியாது என்பதை உலகுக்கு உரக்க அறிவித்துள்ளது.
போட்டி தொடங்கிய வெறும் 64 விநாடிகளிலேயே மத்தியாஸ் கலார்சா அடித்த அபார தொலைதூர கோல், துருக்கி அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஒரே கோலே போட்டியின் வெற்றிக் கோலாக மாறியது.
முதல் பாதி முடிவதற்கு முன் பராகுவே வீரர் மிகுவேல் அல்மிரோன் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்ட போதிலும், 10 வீரர்களுடன் களமிறங்கிய பராகுவே அணியினர் அபார தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைத் தக்க வைத்தனர்.
போட்டிக்குப் பின்னர் பேசிய பயிற்சியாளர் குஸ்டாவோ அல்ஃபாரோ, “வலிமையான அணிகளையும், உலகப் புகழ்பெற்ற எதிரிகளையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்களை ஒருபோதும் பலவீனமான அணியாகவோ, ‘underdog’ அணியாகவோ கருத மாட்டோம். இந்த ஜெர்சிக்காக எப்போதும் முழு அர்ப்பணிப்புடன் போராடுவோம்,” என்று உறுதியாக தெரிவித்தார்.
2010க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுள்ள பராகுவே, தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. எனினும், துருக்கிக்கு எதிரான இந்த வெற்றி, அந்த விமர்சனங்களுக்குத் தகுந்த பதிலாக அமைந்துள்ளது.
இந்தத் தோல்வியால் துருக்கியின் உலகக் கிண்ணப் பயணம் முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா குழுச் சாம்பியன் என்ற இடத்தை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், பராகுவே தனது கடைசி குழுநிலை ஆட்டத்தில் ஜூன் 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. அந்தப் போட்டியும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 20, 2026, 6:09 pm
உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்தார் சிவசங்கரி
June 20, 2026, 11:37 am
உலகக் கிண்ண கால்பந்து: ஹைதியை பந்தாடியது பிரேசில்
June 20, 2026, 11:36 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா
June 19, 2026, 8:58 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கனடா அபாரம்
June 19, 2026, 8:57 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சமநிலை
June 18, 2026, 8:11 am
போர்த்துகல் அணிக்கு எதிராக களமிறங்கிய சேமுவல் முத்துசாமி
June 18, 2026, 8:10 am
