நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 2ஆவது வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி

டொராண்டோ:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியினர் 2ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி, ஐவரி கோஸ்ட் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கனடாவின் டொரோண்டோவில் நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐவரி கோஸ்டை வீழ்த்தி தனது 2ஆவது வெற்றியை பதிவு செய்தது.

ஆட்டம் தொடங்கிய உடனேயே ஐவரி கோஸ்ட் அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அதன் பலனாக, 30ஆவது நிமிடத்தில் பிராங்க் கெஸ்ஸி கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.

பிற்பாதியின் 60ஆவது நிமிடத்தில் ஜெர்மனி ஆட்டக்காரர் உண்டாவ் ஒரு கோலை அடித்து 1-1 என்று சமநிலைக்கு கொண்டு வந்தார்.

பின்னர் ஜெர்மனி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது.

ஆனால் ஐவரி கோஸ்ட் அணியின் சிறப்பான தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

முழு நேர முடிவில் ஜெர்மனி அணி 2-1 என்ற கணக்கில் ஐவரி கோஸ்டை வீழ்த்தி தனது 2ஆவது வெற்றியை பதிவு செய்தது.

இதன் மூலம் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி 32 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset