செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா
நியூயார்க்:
உலகக் கிண்ண கால்பந்தில் அமெரிக்கா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சியாட்டிள் மைதானத்தில் நடைபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி ஆதிக்கம் செலுத்தியது.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ் தவறுதலாக ஓன் கோல் அடித்ததால், அமெரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
முதல் பாதி முடிவடையும் தருவாயில், 43ஆவது நிமிடத்தில் அமெரிக்க வீரர் அலெக்ஸ் ப்ரீமேன் கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
இதனால் முதல் பாதி முடிவில் அமெரிக்க அணி வலுவான நிலையில் இருந்தது.
பிற்பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
ஆட்ட நேர முடிவில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முக்கியமான வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் டி பிரிவில் அமெரிக்கா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 20, 2026, 6:09 pm
உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்தார் சிவசங்கரி
June 20, 2026, 5:08 pm
‘underdog’ இல்லை, அசைக்க முடியாத போராளிகள்: துருக்கியை வீழ்த்தி பராகுவே
June 20, 2026, 11:37 am
உலகக் கிண்ண கால்பந்து: ஹைதியை பந்தாடியது பிரேசில்
June 19, 2026, 8:58 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: கனடா அபாரம்
June 19, 2026, 8:57 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் சமநிலை
June 18, 2026, 8:11 am
போர்த்துகல் அணிக்கு எதிராக களமிறங்கிய சேமுவல் முத்துசாமி
June 18, 2026, 8:10 am
