நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்களுக்கு 2.10 ரிங்கிட் மானிய விலை டீசல்; அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படும்: பிரதமர்

பிந்துலு:

மடானி அரசாங்கம் அடுத்த மாதம் முதல் மலேசியர்களுக்கான மானிய டீசல் விலையை ஒரு லிட்டர் 2.10 ஆகக் குறைக்கும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சரவாக்கின் பிந்துலுவில் இதனை அறிவித்தார்.

பூடி மடானி ரோம் 95 திட்டத்தில் செயல்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றி, அடையாள அட்டை அடிப்படையிலான வழிமுறையைப் பயன்படுத்தி நாடு தழுவிய சீரான டீசல் மானிய சீர்திருத்தத்தின் மூலம் இந்த விலைக் குறைப்பு செயல்படுத்தப்படும்.

இந்த சீர்திருத்தத்தின் மூலம், மலேசியர்கள் நாடு முழுவதும் ஒரே விலையையும் ஒரே முறையையும் பெறுவார்கள்.

டீசல் மானியங்கள் அடையாள அட்டை சரிபார்ப்பு மூலம் நேரடியாக மலேசியர்களுக்கு வழங்கப்படும்.

அதே நேரத்தில் குடிமக்கள் அல்லாதவர்கள்,  தகுதியற்றவர்கள் மானியம் இல்லாத விலையில் டீசலை வாங்க வேண்டும்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் மேற்கு ஆசிய நெருக்கடியின் பின்னணியில், அரசாங்க மானியங்கள் மலேசியர்களை மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்கும், மானிய டீசல் கசிவு, கடத்தலைக் குறைப்பதற்கும் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset