நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல் வேட்பாளர்களை நம்பிக்கை கூட்டணி நாளை அறிவிக்கும்: டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர்:

ஜொகூர் மாநிலத் தேர்தல் வேட்பாளர்களை நம்பிக்கை கூட்டணி நாளை அறிவிக்கும்.

பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான  வேட்பாளர் அறிவிப்பு விழா நாளை தங்காக், புக்கிட் கம்பீரில் நடைபெறவுள்ளது.

இன்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவில்,

மாநிலத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வேட்பாளர்களை அறிவிப்பதற்காக நான் நம்பிக்கை கூட்டணி தலைமையுடன் இருப்பேன்.

ஒருமைப்பாடு, நம்பகத்தன்மை கொண்ட, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் அனைத்து மக்களின் நலனுக்காகவும் கடினமாக உழைக்கும் ஒரு தலைமை ஜொகூருக்குத் தேவை.

மேலும் வெற்றியை நோக்கிய ஒரு முதல் படியாக அவர் விவரித்த இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களையும் பிரதமர் அழைத்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset