செய்திகள் உலகம்
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்
எடின்பர்க்:
ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் நடத்திய தொடா் தாக்குதல்களுக்கு பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்காட்லாந்தின் எடின்பா்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 முஸ்லிம்கள் காயமடைந்தனா். இதையடுத்து வடக்கு, மேற்கு எடின்பா்க்கில் கடைகள் வைத்துள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேல் சட்டை அணியாத நபா் ஒருவா், கையில் மிகப்பெரிய கத்தியுடன் வந்து கடைக்காரா்களை தாக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி வருகின்றன. இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடா்ந்து ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும் காவல்துறையினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடா்பாக 36 வயதான ஸ்காட்லாந்து நபா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு ஸ்காட்லாந்து அமைச்சா் ஜான் ஸ்வின்னி கவலை தெரிவித்துள்ளாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
