செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலில் லெடாங் நாடாளுமன்றத்தின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்: பிபிபி
தங்காக்:
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் லெடாங் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள கம்பீர், தங்காக், செரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும் தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
பிபிபி தேசிய தகவல் தொடர்புத் தலைவர் ஜெயரத்னம் மணியம் @ அஜய் தெரிவித்தார்.
தங்காக்கில் நடைபெற்ற தேசிய முன்னணி தேர்தல் கேந்திர அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், லெடாங் மக்களிடையே வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் நல்லாட்சிக்காக தேசிய முன்னணி மீது மீண்டும் நம்பிக்கை அதிகரித்து வருவதாக கூறினார்.
கடந்த மாநிலத் தேர்தலில் தங்காக் தொகுதியை வெறும் 372 வாக்குகள் வித்தியாசத்தில் பிஎன் இழந்ததை சுட்டிக்காட்டிய அவர், இம்முறை அந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
வாக்காளர்களுடனான எங்களின் சந்திப்புகளும், அடிமட்ட மக்களின் மனநிலையும் தங்காக் மீண்டும் தேசிய முன்னணி வசமாகும் என்பதை காட்டுகின்றன.
கம்பிர், செரம் தொகுதிகளிலும் வலுவான ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 6:59 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் வேட்பாளர்களை நம்பிக்கை கூட்டணி நாளை அறிவிக்கும்: டத்தோஸ்ரீ அன்வார்
June 21, 2026, 10:35 am
காசே ஹவானா உதவித் திட்டத்திற்கு கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் நிதி: பிரதமர் அறிவிப்பு
June 21, 2026, 10:34 am
துர்க்மெனிஸ்தான் மலேசியாவின் எண்ணெய், எரிவாயுத் தொழிலை அங்கீகரித்துள்ளது: பிரதமர்
June 21, 2026, 12:17 am
