செய்திகள் மலேசியா
துர்க்மெனிஸ்தான் மலேசியாவின் எண்ணெய், எரிவாயுத் தொழிலை அங்கீகரித்துள்ளது: பிரதமர்
கோலாலம்பூர்:
உலகின் மிகப்பெரிய எரிவாயு சேமிப்புக் கிணறுகளில் ஒன்றை, பெட்ரோனாஸ் நிறுவனத்தின் பராமரிப்பிற்காக நேற்று ஒப்படைக்க துர்க்மெனிஸ்தான் ஒப்புக்கொண்டது.
இது உலக அளவில் மலேசியாவிற்கு கிடைத்த ஒரு முக்கிய அங்கீகாரமாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த கௌரவம், மலேசியா, அந்நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் திறன்களின் மீது வெளிநாடுகள் வைத்துள்ள மிகுந்த நம்பிக்கையின் தெளிவான பிரதிபலிப்பாகும்.
நேற்று நாங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.
மேலும் உலகின் மிகப்பெரிய எரிவாயு வயல்களில் ஒன்றை மேம்படுத்துவதற்கு மலேசியாவையும் பெட்ரோனாஸ் நிறுவனத்தையும் நிலைநிறுத்தும் இரண்டு முக்கிய தொகுதிகளை அந்த அரசாங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது.
மலேசிய மக்களுக்கு வாழ்த்துக்கள். வெளிநாடுகளுடன் அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்துவதில் எங்களின் அயராத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியின் விளைவாக, அதன் முடிவுகளையும் உடனடித் தாக்கத்தையும் நீங்கள் காணலாம்.
நேற்று நடைபெற்ற எம்கேஎஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இன்க் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 6:59 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் வேட்பாளர்களை நம்பிக்கை கூட்டணி நாளை அறிவிக்கும்: டத்தோஸ்ரீ அன்வார்
June 21, 2026, 10:35 am
காசே ஹவானா உதவித் திட்டத்திற்கு கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் நிதி: பிரதமர் அறிவிப்பு
June 21, 2026, 12:17 am
