நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசே ஹவானா உதவித் திட்டத்திற்கு கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் நிதி: பிரதமர் அறிவிப்பு

பட்டர்வொர்த்:

நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களின் நலனுக்கான தொடர்ச்சியான ஆதரவாக, காசே ஹவானா உதவித் திட்டத்திற்கு  கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுகிறது.

தேசிய பத்திரிகையாளர் தின (ஹவானா) 2026 உச்ச நிலை மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது, ​​இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

இதுவரை, நாடு முழுவதும் உள்ள 773 ஊடகவியலாளர்கள் மொத்தம் 2.26 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகையை  பெற்றுள்ளனர்.

எனவே, இந்த வெற்றியின் காரணமாக, கருணை மற்றும் அன்பின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்கான திட்டத்திற்கு கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்.

ஹவானா 2023 கொண்டாட்டத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட காசே ஹவானா, நிதி உதவி, மருத்துவச் செலவுகள், குடும்ப நலன், பிற வகையான ஆதரவுகள் உட்பட, தேவைப்படும் ஊடகவியலாளர்கள், முன்னாள் ஊடகவியலாளர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

ஹவானா 2026 உச்சிமாநாட்டில் பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோ, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset