நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாய ஒற்றுமைக்கு வலிமையான குரலாக முக்மின் ஒலிக்கும்: டத்தோ வீரா ஷாகுல்

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாய ஒற்றுமைக்கும் மேம்பாட்டிற்கும் வலிமையான குரலாக நாங்கள் ஒலிப்போம் என்று முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ ஷாகுல் ஹமீத் தாவூத் கூறினார்.

சமீபத்தில் தனது ஆண்டுக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்திய முக்மின் அமைப்பு அதன் முதல் செயற்குழு கூட்டத்தை நேற்று மாலை  பிரிக்ஃபீல்ட்ஸ் மாராஸ் மண்டபத்தில் நடத்தியது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ வீரா ஷாகுல், "இது எங்கள் அமைப்பின் முதல் செயற்குழு கூட்டம். மொத்தம் 60 பேர் செயற்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டது மிகப் பெரும் சிறப்பாகும். அதற்கு நான் முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

செயற்குழு கூட்டத்தில் சமுதாய ஒற்றுமை குறித்தும் மலேசிய வாழ் இந்திய முஸ்லிம் சமுதாயத்தை எல்லா துறைகளிலும் மேம்பாடடையச் செய்ய என்னென்ன வழிகள் உள்ளன என்பதை விரிவாக விவாதிக்கப்பட்டது.

முதற்கட்டமாக கல்வி, தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துள்ளோம். அதற்கு உரிய செயல் திட்டங்கள் தீட்டி அதனை வழி நடத்த உரிய பொறுப்பாளர்களை அடையாளம் கண்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அதற்குரிய வரைவு திட்டத்தை வகுத்து செயல்படுத்த இருக்கிறோம். 

நான் முன்பே கூறியது போல் எங்கள் அமைப்பு யாருக்கும் போட்டியான அமைப்பல்ல. எங்கள் இலக்கும் நோக்கமும் சமுதாய ஒற்றுமை, சமூக மேம்பாடு என்பதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset