செய்திகள் மலேசியா
பண்டார் சௌஜானா பெர்டானா தண்ணீர் தொட்டி நீரில் மூழ்கி யூபிஎம் மாணவர் மரணம்: போலிஸ்
சுங்கைபூலோ:
கடந்த ஜூன் 16 இங்குள்ள பண்டார் சௌஜானா பெர்டானாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, யூபிஎம் தொழிற்பயிற்சி மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சுங்கை பூலோ மாவட்ட போலிஸ் தலைவர் முகமது ஹபீஸ் முகமது நூர் இதனை உறுதிப்படுத்தினார்.
ஆரம்பகட்ட விசாரணைகள், பிரேதப் பரிசோதனைகள் இந்த வழக்கை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ முடிவு வருவதற்கு முன்பு, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் பிரேதப் பரிசோதனைக்காக, பாதிக்கப்பட்டவரின் உடல் முன்னதாக புஞ்சாக் ஆலமில் உள்ள அல் சுல்தான் அப்துல்லா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக, பொதுமக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது காவல்துறை விசாரணைகளில் தலையிடக்கூடிய எந்த வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
