நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் 80 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள்; மக்கள் மகத்தான ஆதரவு: அர்விந்த் அப்பளசாமி

ஊத்தாங் மெலிந்தாங்:

மஇகாவின் 80 ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளுக்கு மக்கள் மகத்தான ஆதரவு: வழங்கினர்.

பாகான் டத்தோ தொகுதி இளைஞர் அணி தலைவரும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமத் ஜாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரியுமான அர்விந்த் அப்பளசாமி இதனை கூறினார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மிகப்பெரிய அளவில் ஊத்தாங் மெலிந்தாங் சன்மார்க்க மண்டபத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

சன்மார்க்க மண்டபத்தில் பூப்பந்துப் போட்டியில் இரட்டையர் பிரிவில் 32 குழுக்கள் பங்கேற்றது.

இதில் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டது பெருமை அளிக்கிறது.

ஊத்தாங் மெலிந்தாங் இடைநிலை பள்ளி அரங்கில் நடைபெற்ற புட்சால் கிண்ண கால்பந்து போட்டியில் 132 குழுக்கள் கலந்து கொண்டன.

ஓட்டப்பந்தயம், வலைப்பந்து போட்டி ஊத்தாங் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.

ஓட்டப்பந்தய போட்டியில் 10 அணிகளும் வலைப்பந்து போட்டியில் 32 குழுக்களும் கலந்து கொண்டன.

இன்று நாடு தழுவிய அளவில் ம இகா தொகுதிகள் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு ஏககாலத்தில் நடைபெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

பாகான் டத்தோ தொகுதியில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டது உற்சாகத்தை அளிக்கிறது.

இந்தியர்கள் மத்தியில் தற்போது ம இகா மீண்டும் எழுச்சியை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் மஇகா வீறுநடை போடுகிறது என்று அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset