நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் நாசி கண்டார் உணவகத்தை தீயிட்டு கொளுத்திய ஆடவர்கள் மீது போலிசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோ மோசின்

கோலாலம்பூர்:

ஜொகூரில் நாசி கண்டார் உணவகத்தை தீயிட்டு கொளுத்திய ஆடவர்கள் மீது போலிசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரெஸ்மா தலைவர் டத்தோ மோசின் இதனை வலியுறுத்தினார்.


ஜொகூர் பண்டார் டத்தோ ஓன் பகுதியில் நாசி கண்டார் உணவகம் ஒன்று புதியதாக திறக்கப்படவிருந்தது.


ஆனால் திறக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன் சம்பந்தப்பட்ட உணவகம் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த உணவகம் மீது பெட்ரோல் குண்டை வீசியதுடன் சிவப்பு வண்ணத்தையும் ஊற்றியதாக போலிஸ் அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தால்  சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளருக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் அடிப்படையில் உணவகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை பிரெஸ்மா வண்மையாக கண்டிக்கிறது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மற்ற உணவக உரிமையாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

ஆகவே போலிசார் இச்சம்பவத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறிப்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று டத்தோ மோசின் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset