நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோப்பெங்கில் திடீர் நீர் பெருக்கம்; 3 குழந்தைகள் உட்பட 20 பேர் சிக்கினர்: பாலம் இடிந்து விழுந்தது

ஈப்போ:

கோப்பெங், கோலா ரசிலா கம்போங் உலு கெருந்தும் என்ற இடத்தில் ஏற்பட்ட திடீர் சம்பவத்தில், மூன்று குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட இருபது பேர் உயிர் தப்பினர்.

பேரா மாநில மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாடுகள் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத் இதனை கூறினார்.

மாலை 5.29 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தமக்கு அவசர அழைப்பு வந்தது.

இதைத் தொடர்ந்து கோப்பெங் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அந்த இடத்தில் நீர் பெருக்கம் காரணமாக, பழங்குடியினர் பயன்படுத்தும் பாலம் இடிந்து விழுந்ததாக ஆரம்பகட்ட அறிக்கைகள் குறிப்பிடுவதாக அவர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் வந்தடைந்தபோது, ​​நான்கு சிறுவர்கள், இரண்டு முதியவர்கள், ஐந்து வயது வந்த ஆண்கள், கர்ப்பிணிப் பெண் உட்பட ஒன்பது வயது வந்த பெண்கள், மூன்று பச்சிளங்குழந்தைகள் என 20 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக மீட்புப் பிரிவுத் தலைவருக்குத் தகவல் கிடைத்தது.

அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset